உள்நாட்டு செய்திகள்

ஜ. நா பொதுச்சபை கூட்டத்தில் ஜனாதிபதி உரை…

ஐக்கிய நாடுகள் சபையின் 73 ஆவது பொதுச் சபைத் கூட்டத்தில் ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று(25) உரையாற்றவுள்ளார்.

நியூயோர்க்கிலுள்ள ஐ.நா. தலைமையகத்தில் நேற்று ஆரம்பமாகிய ஐ.நா. சபையின் 73 ஆவது கூட்டத்தொடரில், இன்று(25) பிரதான கூட்டம் நடைபெறவுள்ளது.

இதேவேளை, நேற்றிரவு(24) நடைபெற்ற ஐ.நா. சபையின்பொதுச்சபை கூட்டத்தொடருக்கு இணையான பூகோள சமாதானத்திற்கான நெல்சன் மண்டேலா சமாதான மாநாட்டில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றினார்.

நெல்சன் மண்டேலாவின் நூற்றாண்டு ஜனன தினத்தை முன்னிட்டு பூகோள சமாதானத்திற்கான நெல்சன் மண்டேலா சமாதான மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச தலைவர்கள் பூகோள சமாதானம், மனித உரிமை மற்றும் யுத்தம் தொடர்பில் விரிவாக கலந்துரையாடி வருவதுடன், நெல்சன் மண்டேலாவின் செயற்பாடுகள் உலக நல்லிணக்கிற்கு சிறந்த எடுத்துக்காட்டு என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன​ நேற்று உரையாற்றும்போது குறிப்பிட்டுள்ளார்.

Related posts

எச்.எம்.ஜயவர்தன உலகினை விட்டும் பிரிந்தார்.

wpengine

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கிறார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன….

wpengine

பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் ஜனாதிபதியுடன் சந்திப்பு

wpengine