ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

ஜனாதிபதியிடம் குமார வெல்கம தெரிவித்த அதிரடி கருத்தால் பரபரப்பு!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சுதந்திரக் கட்சி ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன முன்னணிக்கு ஆதரவு வழங்குவதாக தீர்மானித்தால் மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்வதாக சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

நேற்று ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்த முடிவினை அறிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனித்துப் போட்டியிடாவிட்டால் நான் நாளை கட்டுப் பணம் செலுத்துவேன் என அக் கட்சியின் சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

குமார வெல்கம அண்மையில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக கோத்தாபய ராஜபக்ஸ அறிவிக்கப்பட்டமைக்கு கடும் அதிருப்தியை தெரிவித்திருந்ததுடன், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவு வழங்குவதாக தீர்மானித்தால் அரசியல் ரீதியில் மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்வேன். அது எவரும் எதிர்பார்க்காததாக அமையும் என அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

முடிந்தளவு சேறு பூசுங்கள் இனவாதி என மட்டும் அழைக்க வேண்டாம் – மரிக்கார்

wpengine

13 கைதிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்ற ஜனாதிபதி தீர்மானம் – ஜூலை 01 முன்னர் நடைமுறைக்கு.. – சர்வதேச பொது மன்னிப்புச் சபை அறிக்கை

wpengine

மஹேலவின் விவாகரத்து குறித்த உண்மைகள் Instagram மூலம் வெளிச்சத்திற்கு..

wpengine