உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதியின் உரையை ஒலி, ஒளி பரப்ப வேண்டாம் – தேர்தல்கள் ஆணையாளர்

கடந்த 14ஆம் திகதியன்று ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையை மீண்டும் ஒலி, ஒளிபரப்ப வேண்டாம் என்று தேர்தல்கள் ஆணையாளர்,  இலங்கையின் இலத்திரனியல் ஊடகங்களிடம் கோரியுள்ளார்.

இந்த உரை, ஆகஸ்ட் 17 ஆம் திகதியன்று இடம்பெறப்போகும் தேர்தலை மையமாகக்கொண்டு மேற்கொள்ளப்பட்டமையால் அதனை ஒலிபரப்ப வேண்டாம் என்று அவர் கேட்டுள்ளார்.

தமக்கு கிடைத்த பல முறைப்பாடுகளை ஆராய்ந்த பின்னரே மஹிந்த தேசப்பிரிய இந்த கோரிக்கையையை ஊடக தலைமைகளுக்கு அனுப்பியுள்ளார்.

கடந்த 14ஆம் திகதி செவ்வாய்கிழமையன்று ஜனாதிபதி ஆற்றிய உரையை 15ஆம் திகதியன்றும் சில ஊடகங்கள் ஒலி. ஓளிபரப்பு செய்தன.

இது ஏற்கனவே தேர்தல்கள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட சுற்றுநிருபத்துக்கு எதிரான நடவடிக்கை என்று தேசப்பிரிய சுட்டிக்காட்டியுள்ளார்.

(riz)

Related posts

இறுதிப் போட்டியில் இலங்கை அபார வெற்றி

wpengine

நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்காக கடமைகளை சரிவர ஆற்றுமாறு அரச உத்தியோகத்தர்களிடம் கோரிக்கை…

wpengine

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைமைக்கு மீண்டும் யூ.ஆர்.டி.சில்வா

wpengine