உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி ஆணைக்குழுவில் பதிவாகிய கடுமையான இரு முறைப்பாடுகள் விசாரணை ஆரம்பம்…

(FASTNEWS-COLOMBO) அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல்களை விசாரிப்பதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு இதுவரை 150 க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இந்த முறைப்பாடுகளில் கடுமையான இரு முறைப்பாடுகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, கொலன்னாவை எரிபொருள் கூட்டுத்தாபன ஊழியர்கள் சிலரினால் மேற்கொள்ளப்பட்டுள்ள மோசடி மற்றும் நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைகளுக்கு மாறாக களனி நகர சபை உறுப்பினர்களினால் இடம்பெற்றுள்ள மோசடிகள் குறித்த முறைப்பாடுகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படவுள்ளதாக விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts

ரணில் தலைமையில் விசேட கூட்டம்

wpengine

போலித்தகவல்களை பரப்பிய சம்பவம் தொடர்பில் விசாரணை

wpengine

தமிழக மீனவர் சுட்டுக் கொலை – புத்தகயா விஹாரை உள்ளிட்ட இலங்கை நிறுவனங்களுக்கு பலத்த பாதுகாப்பு…

wpengine