உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஜனாதிபதி கொலைச் சதியில் நாமல் குமாரின் நண்பர் கைது…

ஜனாதிபதியை கொலை செய்ய சதி செய்ததாக அண்மையில் வெளிப்படுத்திய ஊழல் எதிர்ப்பு முன்னணியின் தலைவர் நாமல் குமாரவுடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படும் 53 வயதுடைய இந்தியர் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் நேற்று (21) கைது செய்யப்பட்டுள்ளார்.

தான் இந்தியாவில் இயங்கும் அரச விரோத அமைப்பொன்றின் உறுப்பினர் எனவும், இந்தியாவில் தனக்கு எதிராக விடுக்கப்பட்டுள்ள உயிர் அச்சுறுத்தல் காரணமாக இலங்கையில் தலைமறைவாகியுள்ளதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளின் போது சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.

நாமல் குமாரவின் ஊடக அறிவிப்பு தொடர்பில் தனக்கு அறியக் கிடைத்ததாகவும் இது தொடர்பில் கேட்டறிய அவரது வரக்காபொல வீட்டிற்கு பல தடவைகள் சென்றதாகவும் இருந்தும், அவரைச் சந்திக்கக் கிடைக்கவில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இவரைத் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் மேலும் அறிவித்துள்ளது.

Related posts

மனச்சாட்சியுள்ள எவரும் அவசரமாக தேர்தலைக் கோரப்போவதில்லை :அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்

News Editor

முதல் தவணை ஆரம்பத்துடன் வவுச்சர்கள்

wpengine

வெளிநாடுகளில் சிக்கியிருந்த 5485 இலங்கையர்கள் நாட்டுக்கு

wpengine