Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஜனாதிபதி பிரித்தானியா மற்றும் பிரான்ஸூக்கு விஜயம்..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று (17) அதிகாலை சென்றுள்ளார்.

பிரித்தானியாவுக்கான விஜயம் ஒன்றிற்காகவும், பிரான்சின் பெரிஸில் நடைபெறவுள்ள புதிய உலகளாவிய நிதி உடன்படிக்கைக்கான மாநாட்டில் கலந்து கொள்வதற்காகவும் ஜனாதிபதி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

“இன்று உலகம் எதிர்கொள்ளும் நெருக்கடியான சவால்களுக்கு தீர்வு காண்பது” என்ற தொனிப்பொருளில் ஜூன் 22 மற்றும் 23 ஆகிய திகதிகளில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது.

உலக சமூகத்தை பாதித்துள்ள பல்வேறு நெருக்கடிகளுக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்பது குறித்து இந்த மாநாட்டில் கவனம் செலுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

Related posts

வைபர் வலைத்தளம் மீதான தடை நீக்கம்…

wpengine

முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று(02)…

wpengine

வெசாக் பண்டிகையை முன்னிட்டு மூன்று புதிய முத்திரைகள்

wpengine