உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்கள் ஒரே தினத்தில்…

ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களை ஒரே தினத்தில் நடத்துவது தொடர்பில் தற்போது கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை ஊடங்களுக்கு அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

தேர்தலை பகுதி பகுதியாக நடத்தாமல் மக்களுக்கு சிரமம் இன்றி ஒரே தடவையில் நடத்த வேண்டும் என்று மக்களுக்கு உறுதியளிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி மாகாணசபைத் தேர்தல்களை ஒரே தினத்தில் நடத்த வேண்டும்.

அதற்கு மாகாண சபைகளின் காலம் நிறைவடையும் வரை காந்திருந்து இறுதியாக ஒரே தடவையில் அனைத்தையும் கலைத்து விட்டு தேர்தலை நடத்த வேண்டும். அதற்கு 6 மாத காலம் வரை காத்திருக்க வேண்டும்.

இன்றேல், விசேட சட்டமூலம் ஒன்று கொண்டு வந்து, மாகாண சபைகளை ஒரே தடவையில் கலைத்து விட்டு தேர்தலுக்கு செல்ல வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

 

(rizmira)

Related posts

AstraZeneca 2வது டோஸ் செலுத்துகை

wpengine

ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி இராஜினாமா…

wpengine

சந்திரிகா மீதான குண்டுத்தாக்குதல் – இருவர் குற்றவாளி வலையில்

wpengine