உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகையின் தொல்பொருட்கள் தொடர்பில் ஆய்வு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரி மாளிகையின் தொல்பொருள் நினைவுச் சின்னங்களுக்கு ஏற்பட்ட சேதம் தொடர்பில் அறிக்கையொன்றை பெற்றுக்கொள்ள தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் தீர்மானித்துள்ளார்.

இதற்காக விசேட குழுவொன்றை ஈடுபடுத்தவுள்ளதாக தொல்பொருள் பணிப்பாளர் நாயகம், பேராசிரியர் அநுர மனதுங்க தெரிவித்தார்.

ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரி மாளிகையில் இருந்து செயற்பாட்டாளர்கள் வெளியேறியதையடுத்து, அந்த வளாகத்தில் உள்ள தொல்பொருள் நினைவுச்சின்னங்களை கண்காணிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக தொல்பொருள் திணைக்களம் தெரிவித்தது.

ஜனாதிபதி மாளிகையில் இருந்த பிரித்தானிய காலத்தை சேர்ந்த தொல்பொருள் பெறுமதிவாய்ந்த பல ஓவியங்கள் பாதுகாப்பாக அகற்றப்பட்டுள்ளதாக தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

Related posts

நிதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மே மாதத்தில்..

wpengine

இலங்கையின் 72வது சுதந்திர தினம் இன்று

wpengine

ஜனாதிபதியினால் அவசர காலநிலை பிரகடனம்…

wpengine