உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி – முதலமைச்சர்களுடனான சந்திப்பு இன்று

மாகாண முதலமைச்சர்கள் மற்றும் ஜனாதிபதிக்கு இடையிலான விஷேட சந்திப்பொன்று இன்று(10) இடம்பெறவுள்ளது.

இன்று காலை பாராளுமன்ற வளாகத்தில் இந்தக் குறித்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக தெரியவந்துள்ளது.

இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் மாகாண சபைகளுக்கு நிதி ஒதுக்கிய முறை தொடர்பில் மாகாண முதமைச்சர்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

இதன்படி கடந்த திங்கள்கிழமை இது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் மாகாண முதலமைச்சர்களிடையே விஷேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

இதேவேளை குறித்த பிரச்சினைக்கு இன்று தீர்வு பெற்றுத் தருவதாக ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார் என, மத்திய மாகாண முதமைச்சர் சரத் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெறும் இந்தக் கலந்துரையாடலின் போது அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வொன்றை ஜனாதிபதி வழங்குவார் என அவர் மேலும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Related posts

தெற்கு அபிவிருத்தி வேலைத் திட்டம் அடுத்த மாதம்…

wpengine

அரச மருந்தகங்கள் கூட்டுத் தாபனத்தின் முக்கிய அறிவிப்பு

wpengine

சிறுவர்களை வர்த்தகத்தில் ஈடுபடுத்துபவர்களை கண்டறிய விசேட குழு…

wpengine