உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை ரஷ்யா விஜயம்…

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை(22) ரஷ்யாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

குறித்த இந்த விஜயத்தில் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள், விஞ்ஞானமும் தொழில்நுட்பமும், புதிய உற்பத்திகள், குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தல், கலாசாரம் முதலான துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கிலான உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படவுள்ளன.

இரு நாடுகளுக்கிடையிலும் நட்புறவை வளர்த்து, பல்துறை சார்ந்து இருதரப்புகளும் அனுகூலம் பெறும் வகையில் தொடர்புகளை மேம்படுத்துவதே இந்த விஜயத்தின் நோக்கம் என ஜனாதிபதியின் ஊடக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

(rizmira)

Related posts

வட மத்திய மாகாண சபையின் அனைத்து வாயில்களையும் மறித்து போராட்டம்..

wpengine

ஒரு இலட்சம் தொழில்வாய்ப்பு; சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்

wpengine

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை

wpengine