உள்நாட்டு செய்திகள்

ஜப்பான் உதவியுடன் யாழ் பல்கலைக்கழக விவசாய பீடத்தை மேம்படுத்த நடவடிக்கை

யாழ் பல்கலைக்கழக விவசாய பீடத்தில் ஆராய்சி மற்றும் பயிற்சி நிலையங்களை உருவாக்க தேசிய பொருளாதார அமைச்சினால் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேற்கூறப்பட்ட நடவடிக்கை தொடா்பில் ஜப்பான் அரசாங்கம் உதவியாக 2100 மில்லியன் ரூபா பணத்தொகையை வழங்கி வைப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

வடக்கு மாகாண உலர் பிரதேசங்களில் ஆராய்ச்சி மற்றும் கல்விசார் நடவடிக்கைகளை மேம்படுத்துவதே இதன் பிரதான நோக்கமாகும்.

இதனூடாக அதிக எண்ணிக்கையிலான விலங்கு விஞ்ஞானம், விஞ்ஞானம், உயிரியல் விவசாயம், வேளாண்மை விவசாயம், பொறியியல் விவசாயம் மற்றும் பொருளாதார விவசாயம் போன்ற துறைகளை உருவாக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் மேற்பார்வையில் அமைச்சரவை இதற்கு அங்கீகாரம் அளித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மேலும் 75 நோயாளிகள் அடையாளம்

wpengine

நாளை அதியுயர் வெப்பநிலை நிலவும் சாத்தியம்

wpengine

ஸ்ரீ.சு.கட்சியின் ஆண்டு விழாவுக்கான அழைப்பு இம்முறை மஹிந்தவுக்கு இல்லை..

wpengine