உலக செய்திகள்

ஜப்பான் பிரதமருடன் இந்திய பிரதமர் பேச்சுவார்த்தை

(FASTNEWS|COLOMBO) – ஜி20 மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இன்று ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஜி-20 அமைப்பின் உச்சி மாநாடு ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரில் நாளையும் நாளை மறுதினமும் நடைபெற உள்ளது.

இந்நிலையில், இன்று ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவை மோடி சந்தித்தார். ஜப்பானில் புதிய பேரரசரின் ரீவா சகாப்தம் தொடங்கிய பிறகு, இரு தலைவர்களிடையே நடைபெறும் முதல் சந்திப்பு இதுவாகும்.

இந்த சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கிடையிலான உறவு மற்றும் நலன்கள் குறித்து இருவரும் விவாதித்தனர். ஒக்டோபர் மாதம் நடைபெற்ற உள்ள புதிய மன்னரின் முடிசூட்டு விழாவில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பங்கேற்பார் என்ற தகவலை மோடி தெரிவித்தார்.

Related posts

இந்தோனேசியாவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்…

wpengine

இராஜினாமாவுக்கு தயாராகும் கிர்கிஸ்தான் ஜனாதிபதி

wpengine

கொவிட்-19 வைரஸ் : சீனாவில் மேலும் 653 பேருக்கு உறுதி

wpengine