உலக செய்திகள்

ஜப்பான் வானில் பறந்த வடகொரியா ஏவுகணை – பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம்

இன்று(29) காலை வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை மேற்கொண்டுள்ளது. இந்த ஏவுகணை ஜப்பான் வானில் பயனித்துள்ளதால் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த பிரதமர் ஷின்ஸோ அபே உத்தரவிட்டுள்ளார்.

வட கொரியா அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை களை வீசி பரிசோதித்து வருகிறது. இதற்கு அமெரிக்கா, தென் கொரியா, ஐப்பான் உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பொருளாதார தடையும் விதித்தன. அதை கண்டு கொள்ளாத வடகொரியா தொடர்ந்து கண்டம் விட்டு, கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், வடகொரியா இன்று காலை மீண்டும் ஏவுகணை சோதனை மேற்கொண்டதில் இந்த ஏவுகணை சுமார் 14 நிமிடங்கள்
ஜப்பானின் வான் பகுதியில் பயனித்துள்ளதால் உடனடியாக பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த பிரதமர் ஷின்ஸோ அபே உத்தரவிட்டுள்ளார்.
மேலும், “தங்கள் நாட்டின் வானிலை ஏவுகணையை பறக்கவிடுவது பொறுப்பற்ற செயல்” என்று அபே தெரிவித்தார்.

ஜப்பான் கடல் பகுதியில் இருந்து 1,180 கி.மீ தூரம் கடந்து சென்று பசுபிக் கடலில் விழுவதற்கு முன்பாக ஏவுகணை மூன்று பாகங்களாக வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது.

Related posts

சுர்ஜித்தை மீட்கும் பணிகள் 60 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்கிறது

wpengine

அகதிகளின் படகு கவிழ்ந்ததில் சுமார் 200 இற்கும் மேற்பட்ட அகதிகள் பலி…

wpengine

அரச மருத்துவமனையில் ஒட்சிசன் பற்றாக்குறைவால் 49 குழந்தைகள் பலி..

wpengine