உள்நாட்டு செய்திகள்

“ஜீவனால் பெரும் தலையிடி’’

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுத்துள்ள மக்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காக, தமிழக அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ள அத்தியாவசியப்  பொருள்களை பகிர்ந்தளிக்கும் போது, பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளருமான ஜீவன் தொண்டமானின் அழுத்தம் அதிகமாக காணப்படுவதாக இலங்கை கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் நெவில் விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

கண்டியில் இன்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

குறித்த பொருள்களை ஜீவன் தொண்டமானுக்கு தேவையானவர்களுக்கு வழங்குமாறு அழுத்தம் விடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எனினும் இந்தக் குற்றச்சாட்டை மறுப்பதாக ஜீவன் தொண்டமான் எம்.பியின் பிரத்தியேக செயலாளர் தமிழ்மிரருக்குத் தெரிவித்தார்.

Related posts

அஜித் ரோஹண குறித்து பொலிஸ் ஆணைக்குழுவின் தீர்மானம்!

News Editor

தங்காலையில் 330 கிலோகிராம் ஹெரோயின் மீட்பு

wpengine

சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களின் விபரங்கள்…

wpengine