உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஜெனீவா தீர்மானம் குறித்து ஆராய இலங்கைக்கு ஜப்பான் பிரதிநிதி விஜயம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து ஆராய்வதற்கு ஜப்பான் விசேட பிரதிநிதியொருவர் இலங்கை விஜயம் செய்யவுள்ளார்.

தீர்மானம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி நடைமுறைச் சாத்தியமான ஓர் திட்டமொன்றை உருவாக்கும் முயற்சியில் ஜப்பானின் விசேட பிரிதிநிதி மெத்து நெபூச்சீ இலங்கை விஜயம் செய்யவுள்ளார்.

எதிர்வரும் 24ம் திகதி அவர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நெபூச்சீ, ஜப்பான் அரசாங்கத்தின் குற்ற விசாரணை தொடர்பான நிபுணத்துவ நீதவான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கைக் குறித்த ஜெனீவா தீர்மானம் தொடர்பான மீளாய்வு செய்யும் ஜப்பான் பிரதிநிதியாகவும் நெபூச்சி கடமையாற்றி வருகின்றார்.

மேலும் விசாரணைகள் தொடர்பிலான பொறிமுறைமையை இலகுவாக்கும் திட்டம் தொடர்பில் இலங்கை விஜயத்தின் போது பேசப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சிவில் பிரதிநிதிகளை நெபூச்சி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

Related posts

இன்று உலகக் குரல் நாள்

wpengine

இசுருபாய கட்டடம் தற்காலிகமாக பூட்டு

wpengine

தேயிலை உற்பத்தி தொடர்பில் ஆய்வு மேற்கொள்ள ரஷ்யாவின் விசேட குழு இலங்கை வருகை…

wpengine