உள்நாட்டு செய்திகள்

ஜேவிபி இனால் ஜனாதிபதி வேட்பாளரை களமிறக்கத் தயார்…

20ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை பாராளுமன்றில் நிறைவேற்ற முடியாது போனால், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமது கட்சி வேட்பாளர் ஒருவரை நிறுத்தவுள்ளதாக, மக்கள் விடுதலை முன்னணியின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து ​கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“.. எமது பிரதான முயற்சி 20ஆவது திருத்தத்தின் ஊடாக இந்த நிறைவேற்று அதிகாரமுடைய நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்வதாகும். மார்ச் 5ஆம் திகதி வரை அரசாங்கத்துக்கு காலம் உள்ளது. அதற்காக மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகள் கிடைக்காது போனால் கண்டிப்பாக நாம் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர் ஒருவரை களமிறக்குவோம்..” எனத் தெரிவித்துள்ளார்.

Related posts

தமிழ் மொழிச் சமூகங்களின் போருக்குப் பின்னரான புரிதல்..

wpengine

ஆணைக்குழுவின் விசாரணைகளுக்கு ஒத்தாசை வழங்கவே சென்றேன் – ரிஷாத்.

wpengine

உரிமையும் சமாதானமும் பாலஸ்தீனத்தில் நிலவ வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா..!

wpengine