கேளிக்கை

ஜோதிகாவின் அடுத்த படமாக ‘காற்றின் மொழி’…

வித்யா பாலன் நடிக்க, சுரேஷ் திரிவேணி இயக்கத்தில் கடந்த 2017 நவம்பரில் வெளியான ஹிந்திப் படம் ‘Tumhari Sulu’. சுலோச்சனா என்ற குடும்பத் தலைவியான வித்யா பாலன், வானொலி ஒன்றில் பணி புரிகிறார். இதனால் பல பிரச்சினைகளை அவர் சந்திக்கிறார். இவ்வாறு நகரும் ‘Tumhari Sulu’ படத்துக்கு ஹிந்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து, தமிழில் ரீமேக் செய்ய முடிவு செய்யப்பட்டது.

இதை ராதாமோகன் இயக்க உள்ளார். இதில், வித்யாபாலன் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க ஜோதிகா ஒப்பந்தமானார். ‘மொழி’ வெற்றிப் படத்துக்குப் பின்னர் ராதாமோகன் – ஜோதிகா கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இப்படத்துக்கு ‘காற்றின் மொழி’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் ஜோதிகாவுடன் இணைந்து விதார்த் முக்கிய கதாபாத்திரம் ஏற்கிறார். முதல் கட்டப் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்கவுள்ளது. படத்தின் ஒளிப்பதிவாளராக மகேஷ் முத்துச்சாமி, எடிட்டராக கே.எல்.பிரவீன் ஒப்பந்தமாகியுள்ளனர்.

Related posts

மெர்சல் படத்தில் நடித்த இந்த குட்டி நட்சத்திரம் யார்?

wpengine

பார்ட்டிக்கு போன இடத்தில் பாலியல் தொல்லை…

wpengine

ஆபாச சினிமா போஸ்டருக்கு தடை…

wpengine