கேளிக்கை

ஜோதிகா – கார்த்தி நடிக்கும் படத்தின் தலைப்பு வெளியானது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாபநாசம் படத்தை இயக்கிய ஜித்து ஜோசப் இயக்கத்தில் ஜோதிகா – கார்த்தி நடிக்கும் படத்தின் தலைப்பு பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

திரில்லர் கதையாக உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வரும் நிலையில், இப்படத்திற்கு ‘தம்பி’ என்று பெயர் வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இப்படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட இருக்கிறது.
கார்த்தி - ஜோதிகா
இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசை அமைக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கில் வரும் டிசம்பர் 20ஆம் திகதி இப்படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

Related posts

பிரபல ரெப் பாடகர் Nipsey Hussle துப்பாக்கிச்சூட்டில் பலி…

wpengine

தீபாவளிக்கு வெளியாகவுள்ள படத்தை இணையதளங்களில் வெளியிட தடை

wpengine

டுவிட்டரில் உச்சத்தை தொட்ட சிவகார்த்திகேயன்…

wpengine