ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

ஜோதியின் “36 வயதினிலே” – திரையரங்கு முழுவதும் மல்லிகைப் பூ வாசனை

’36 வயதினிலே’ பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட ஜோதிகா “கணவனின் ஒத்துழைப்பிருந்தால் எல்லாப் பெண்களுக்கும் ஜெயிக்கலாம் என சூர்யாவினை ஒரு படி மேலே வைத்து  தன் கருத்தினை தெரிவித்தாராம்.

ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கத்தில் ஜோதிகா, ரகுமான் உள்ளிட்ட பலர் நடித்த’36 வயதினிலே’ சமீபத்தில் வெளியானது. படத்துக்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து, பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இச்சந்திப்பில் ஜோதிகா, சூர்யா உள்ளிட்ட மொத்த படக்குழுவினரும் கலந்து கொண்டார்கள்.

இச்சந்திப்பில் ஜோதிகா பேசியது, “’36 வயதினிலே’ தொடர்ந்து நல்ல கதைகள் வந்தால் கண்டிப்பாக நடிப்பேன். இன்னும் இப்படத்தை மஞ்சு வாரியர் பார்க்கவில்லை. கடந்த வாரம் இருவரும் பேசினோம். அவருடைய கருத்தை அறிய காத்திருக்கிறேன். நாட்டில் பிரதமர், ஜனாதிபதி ஆகிய உயரிய பதவிகளை பெண்கள் அடைய கணவரின் ஒத்துழைப்பு தேவை” எனவும் கூறினார்.

இச்சந்திப்பில் சூர்யா பேசியது, “’36 வயதினிலே’ பார்த்துவிட்டு அப்பா சிவகுமார் உன்னை விட ஜோதிகா நன்றாக நடித்திருக்கிறார் என்றார். நானும் அதே தான் சொல்கிறேன் என்றேன். ஜோதிகா மீண்டும் நடிக்க வந்தபோது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. தொடர்ந்து நல்ல கதைகள் அமைந்தால் நடிப்பார்”

ஒரு திரையரங்கு உரிமையாளர் காமெடியாக “ரொம்ப நாள் கழித்து திரையரங்கு முழுவதும் மல்லிகைப் பூ வாசனை அடிக்கிறது” என்றார். அவ்வளவு பெண்கள் இப்படத்தை பார்க்க வந்து, எங்களுக்கு ஆதரவு அளித்திருக்கிறார்கள். அனைவருக்கும் நன்றி” எனவும் தெரிவித்தார்.

Related posts

இஸ்லாம் மத வழிபாட்டில் மாறிய இளவரசர் ஹெரி – மெக்கலம் [VIDEO]

wpengine

உயரதிகாரியைக் காப்பாற்ற பணம் வசூலிப்பு

wpengine

பிரபல பாடகர் ரஜீவ் செபஸ்தியனை கைது செய்ய உத்தரவு…

wpengine