ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

ஞானசார தேரரது கருத்து உண்மைக்கு புறம்பானது – துருக்கி அறிக்கை

(FASTNEWS | COLOMBO) – பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தொலைகாட்சி நிகழ்ச்சியொன்றில் தெரிவித்த கருத்தானது முற்றிலும் பொய்யானது என இலங்கைக்கான துருக்கி தூதரகம் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

துருக்கியின் ஒரு அமைப்பிலிருந்து இலங்கைக்கு நிதி வருவதாகவும் ஊடகவியலாளர்களுக்கு உபகரணங்கள் வழங்கி பிழையான கருத்துக்களை வழங்க தூண்டுவதாகவும், ஊடகங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சிப்பதாகவும் ஞானசார தேரர் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் குற்றம் சாட்டியிருந்தார்.

எனினும் இதனை முற்றாக மறுத்துள்ள துருக்கி தூதரகம் இலங்கையுடன் துருக்கி 2004ம் ஆண்டு முதல் மிகவும் நெருக்கமான உறவை பேணி வருவதாகவும் மனிதாபிமான முறையிலும் தொழில்நுட்பரீதியாகவும் பல உதவிகளை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும், இலங்கையோடு மிகவும் நெருக்கமாக செயற்படும் துருக்கி எந்தவொரு தீவிரவாதத்திற்கு எதிராகவும் தனது ஒத்துழைப்பை வழங்கும் என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த துருக்கியின் அறிக்கையானது;

Related posts

மேதினக்கூட்டத்தில் வேட்டியுடன் மேடை ஏறி ‘காதல் ரோஜாவே’ பாடலைப் பாடி அசத்திய அமைச்சர்!

wpengine

மங்கள வீட்டிற்கு சென்ற மைத்திரி!

wpengine

இலங்கை – தென்னாபிரிக்க வீரர்களது Dinner அமைச்சரால் நிறுத்தம்….

wpengine