உள்நாட்டு செய்திகள்

ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு – BBS

(FASTNEWS | COLOMBO) – சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு இன்று(23) விடுதலை கிடைக்கக்கூடும் என பொது பலசேனா அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் வித்தாரந்தெனியே நந்த தேரர் தெரிவித்துள்ளார்.

ஞனாசார தேரருக்கு பொது மன்னிப்பை வழங்குவது தொடர்பான ஆவணத்தில் ஜனாதிபதி கையொப்பமிட்டுள்ளார். இந்நிலையில், இன்று(23) பிற்பகல் 3.00 மணியளவில் ஞானசார தேரருக்கு விடுதலை கிடைக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 18 ஆம் திகதி, நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் ஞானசார தேரருக்கு 19 வருட கடூழிய சிறைத் தண்டனையை 6 வருடங்களில் அனுபவித்து நிறைவு செய்யும் வகையில் தண்டனை விதிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

உயர்நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டுள்ள தடையினால் அரசின் வருவாயில் எந்தப்பாதிப்பும் இல்லை – பிரதமர்

wpengine

ரிஷாத் மீதான குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்யென தெரிவுக்குழுவில் அம்பலம்

wpengine

பொதுத் தேர்தல் – சுகாதார வழிமுறைகள் அடங்கிய வர்த்தமானி நாளை

wpengine