ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

ஞானசார தேரரை விடுவிக்கக் கோரி கொழும்பு கோட்டை நோக்கி பாரிய பாத யாத்திரை…

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு கோரி இன்று(04), பௌத்த பிக்குகள், பொதுமக்கள் உள்ளிட்டவர்கள் இணைந்து பாத யாத்திரை ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

களனி ரஜமஹா விஹாரையிலிருந்து கொழும்பு கோட்டே ரயில் நிலையம் வரையில் பாரியளவில் குறித்த இந்த பாத்திரை மேற்கொள்ளப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கில் சிங்கள பௌத்த அமைப்புக்களினால் இந்த பாத யாத்திரைப் போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.

கொழும்பு கோட்டேயில் அமைந்துள்ள விஹாரைக்கு எதிரில் சத்தியாக் கிரக போரட்டமும் இன்று(04) நடத்தப்பட உள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

சேனா படைப் புழுவிற்காக இலங்கை சர்வதேச உதவியை நாடுகிறது..

wpengine

பூஜித் ஜயசுந்தரவின் இங்கிலாந்து பயணத்திற்கு தடங்கள் – நிகழ்சித் திட்டமும் இரத்து…

wpengine

சர்ச்சைக்குரிய நண்பர்களுடன் மீண்டும் இணைந்தார் நாமல்!

wpengine