உள்நாட்டு செய்திகள்

ஞானசார தேரர் தொடர்பில் இன்று ஜனாதிபதியுடன் பௌத்த சமய விவகார அமைச்சர் கலந்துரையாடல்….

பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரது, விளக்கமறியலில் விவகாரம் தொடர்பாக, பௌத்த சமய விவகார அமைச்சருக்கும் ஜனாதிபதிக்கும் இடையே முக்கிய சந்திப்பொன்று இன்று(20) இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட தண்டனைக்கு எதிராக பௌத்த பிக்குகள், அமைப்புகள் கண்டனங்களைத் தெரிவித்து வரும் இந்நிலையில், நீதியமைச்சர் தலதா அத்துகோரள மற்றும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க ஆகியோருடன் இது குறித்து நேற்று கலந்துரையாடப்பட்டு இருந்த நிலையில், இன்று ஜனாதிபதியுடன் சந்திப்பு இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவியை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் ஞானசாரர் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டு அவருக்கு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தேசபந்துவின் மனு தள்ளுபடி!

Azeem Kilabdeen

“சீல் ஆடை” வழக்கு தீர்ப்புக்கு எதிராக இன்று(11) மேன்முறையீடு…

wpengine

முத்துராஜவல பகுதியில் குப்பைகளைக் கொட்ட இடைக்காலத் தடை…

wpengine