உள்நாட்டு செய்திகள்

டிஜிட்டல் முறையில் பாராளுமன்றக் கூட்டம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாராளுமன்றத்தின் 09வது செயற்குழுக் கூட்டத்தை டிஜிட்டல் தொழில்நுட்ப முறையில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

கொவிட் -19 தொற்று காரணமாக சமூக இடைவௌி தொடர்பான ஒழுங்குமுறைகள் தொடர்ந்தும் பேணப்படுமாயின் இந்நடவடிக்கை எடுக்கப்படும் என பாராளுமன்றத்தின் தொலைத்தொடர்பு திணைக்களம் அறிக்கை வௌியிட்டுள்ளது.

இதனடிப்படையில், அதற்கான இயலுமை மற்றும் தொழில்நுட்ப குறைபாடுகளை கண்டறிவதற்காக நேற்று(22) செயற்குழு மண்டபத்தில் ஒத்திகை இடம்பெற்றுள்ளது.

பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க மற்றும் பிரதி செயலாளர் நீல் இத்தவெல ஆகியோரின் பங்கேற்புடன் இந்த ஒத்திகை இடம்பெற்றது.

செயற்குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் மற்றும் பார்வையாளர்களின் பிரசன்னமின்றி டிஜிட்டல் தொழில்நுட்ப முறையில் செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்க முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

Related posts

மஹரகம வர்த்தக நிலையம் தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள்..

wpengine

இதுவரையில் 496 பேர் இன்றைய தினம் அடையாளம்

wpengine

‘பாக்கு’ பாவனையை நீக்குவதற்காகு புதிய சட்டமூலம்…

wpengine