Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

டீசல் விலை அதிகரிக்கப்பட்டாலும் பஸ் கட்டணம் அதிகரிக்கப்படாது – தேசிய போக்குவரத்து ஆணைக்குழு..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  டீசல் விலை அதிகரிக்கப்பட்டாலும் பஸ் கட்டணம் அதிகரிக்கப்படாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

டீசலின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், பஸ் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இடமில்லை என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் சஷி வெல்கம தெரிவித்துள்ளார்.

பஸ் கட்டணம் தொடர்பில் தற்போதுள்ள சட்டங்கள் மற்றும் உடன்படிக்கைகளின் பிரகாரம் தற்போதைக்கு பஸ் கட்டணத்தை உயர்த்த முடியாது எனவும் பஸ் கட்டணத்தை உயர்த்த வேண்டுமாயின் உடன்படிக்கைகளின் பிரகாரமே மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பஸ் கட்டணத்தை உயர்த்துமாறு இதுவரை எவரும் கோரிக்கை விடுக்கவில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

கொண்டயாவையும் என்னையும் சமமானவர்களாக சித்திகரிக்கும் ஊடகங்கள் – யோஷித

wpengine

யாழ்.பல்கலைக்கழக மோதல் – காலவரையறை இன்றி விஞ்ஞான பீடம் மூடப்பட்டது

wpengine

முட்டை – கோழி இறைச்சி விலைகளில் மாற்றம்

wpengine