உள்நாட்டு செய்திகள்

‘டெல்டா’ : பாரிய அச்சுறுத்தலில் இலங்கை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இந்தியாவில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனாத் தொற்றின் திரிபான டெல்டா தொற்று, எதிர்வரும் நாட்களில் இலங்கையில் தீவிரமாக பரவும் ஆபத்து உள்ளதென தெரிவித்த மருந்து உற்பத்தி விநியோகம் மற்றும் ஒழுங்குப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

“உலக நாடுகள் அனைத்திலும் டெல்டா பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில், அதிலிருந்து இலங்கையால் தப்பிக்க முடியாது.

தற்போது இலங்கையில் செலுத்தப்படும் கொரோனா தடுப்பூசிகளான அஸ்ட்ராசெனிகா, பைசர், சினோஃபாம் ஆகிய தடுப்பூசிகள், டெல்டா தொற்றைக் கட்டுப்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளதென்றும் தெரிவித்த அமைச்சர், இந்த தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டவர்களுக்கு டெல்டா தொற்றால் பாரிய அச்சுறுத்தல் ஏற்படாது.

மேலும், தென்அமெரிக்காவின் பெரு நாட்டை மையப்படுத்தி உருவாகிய லெம்டா தொற்று, பல நாடுகளில் வேகமாகப் பரவி வரும் நிலையில், அமெரிக்காவின் கலிபோர்னியாவை மையமாகக் கொண்டு, டிப்ஸ்சைலன் என்ற தொற்றும் பல நாடுகளில் பரவி வருகிறது” என சுட்டிக்காட்டினார்.

Related posts

அனுராதபுர பாதுகாப்புக்காக பொருத்தப்பட்ட 47 CCTV கெமராக்களும் செயலிழப்பு

Azeem Kilabdeen

போர்ட் சிட்டி திட்டத்திற்கு இன்னும் 2 ஹெக்டயர்கள் சீனாவுக்கு வழங்க இணக்கம்.

wpengine

‘சகல விலங்குகளும் தண்டனைக்கு அஞ்சுகிறது’ என்ற தொனிப்பொருளின் கீழ் பொசன் வாரம் பிரகடனம்

wpengine