உலக செய்திகள்

டெல்லியில் கடும் பனி மூட்டம் 8 ரயில்கள் இரத்து…

டெல்லியில் நிலவும் கடும் பனி மூட்டம் காரணமாக, இன்று(13) 69 ரயில்களின் சேவை தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், 8 ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

புதுடெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் தற்போது கடுமையான பனிப்பொழிவு காரணமாக காலை வேளைகளில் போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக விமானம் மற்றும் ரயில் சேவையில் பாதிப்பு நிலவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்றும்(13) கடும் பனி மூட்டம் நிலவியது. அருகில் செல்லும் வாகனங்கள்கூட தெரியாத அளவுக்கு சாலைகளில் பனிமூட்டம் சூழ்ந்திருந்தாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்று(13) 69 ரயில்கள் தாமதமாக சென்றுள்ளன. டெல்லி-வாரணாசி மகனாமா எக்ஸ்பிரஸ், டெல்லி- ஆசம்கர் காய்பியத் எக்ஸ்பிரஸ், ஆனந்த் விகார்- மாவு எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 8 ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் 22 ரயில்களின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, விமான சேவையில் எந்த பாதிப்பும் ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை.

Related posts

கலிபோர்னியா துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி…

wpengine

எம்மால் முடிந்ததை நாம் இந்தியாவுக்கு செய்வோம்

wpengine

மெக்சிகோவில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 12 பேர் உயிரிழப்பு…

wpengine