உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

தங்கொட்டுவையில் எரிந்த நிலையில் ஐந்து சடலங்கள் மீட்பு

சிலாபம் தங்கொட்டுவ பகுதியில் எரியுண்ட நிலையில் ஐந்து சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இன்று காலை குறித்த இந்த சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கொட்டுவ கொஸ்ஹேனவத்த என்ற இடத்தில் எரியுண்ட நிலையில் நின்ற வேன் ஒன்றுக்குள் இருந்தே இந்த சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிடுகின்றனர்.

பெரும்பாலும் வேனில் ஏற்பட்ட தீ காரணமாக இவர்கள் அனைவரும் எரியுண்டு இறந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

மேலும், குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

யாழ்.மாணவி வித்தியா வழக்கில் டீ-என்-ஏ பரிசோதனைக்கு அனுமதி

wpengine

தேர்தல் ஆணையகத்தில் ரிஷாட் முறைப்பாடு

wpengine

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – 38 கோப்புகள் பதில் பொலிஸ்மா அதிபருக்கு

wpengine