ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

விக்டர் ரத்நாயக்காவின்  மனைவி தங்க ஆபரண மோசடி தொடர்பில் கைது…

தங்க ஆபரண மோசடி தொடர்பில் பிரபல பாடகரான விக்டர் ரத்நாயக்காவின்  மனைவி காவல் நிலையத்தில் இன்று(09) காலை சரணடைந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் திகதி முதல் கடந்த 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் வங்கியொன்றில் கடமையாற்றிய குறித்த பெண் 9 இலட்சத்து 89 ஆயிரம் பெறுமதியான தங்க ஆபரண மோசடியுடன் தொடர்புடையவர் என வங்கி முகாமையாளரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய விசாரணைகளை ஆரம்பித்த காவல் துறையினர் குறித்த பெண்ணை காவல் நிலையத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தனர்.

எனினும் அவர் காவல் நிலையத்திற்கு செல்லாத நிலையில், இன்று(09) காவல் நிலையத்திற்கு வருகை தராதவிடத்து அவரின் கணவர் கைது செய்யப்படவிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையிலேயே அவர் இன்றைய தினம் காவல் நிலையத்தில் தனது சட்டத்தரணியுடன் முன்னிலையாகியுள்ளார்.

#g-reesh

Related posts

அனுராதா ஸ்ரீராமை அழ வைத்த வார்த்தை!

wpengine

சஜித் பிரேமதாசவுக்கு ஐ.தே.கட்சியில் பபுதிய பதவி…

wpengine

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள 3,000 ஊழியர்கள் உடனடியாக பணி நீக்கம்…

wpengine