ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

தனஞ்சய டி சில்வாவின் வீட்டுக்கு பலத்த பாதுகாப்பு – விசாரணைகள் ஆரம்பம்…

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் வீரர் தனஞ்சய டி சில்வாவின் ரத்மலனாயில் அமைந்துள்ள வீட்டுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்படுவது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு பாதுகாப்பு வழங்கப்படுவது குறித்து பொலிஸ் மா அதிபரிடம், பாதுகாப்பு அமைச்சு அறிக்கையொன்றையும் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த மே மாதம் 25ம் திகதி முதல் பத்து பொலிஸ் உத்தியோகத்தர்களினால் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கிரிக்கெட் வீரர் தனஞ்சயவின் தந்தை கடந்த மே மாதம் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்றில் உயிரிழந்திருந்தார்.

பாதாள உலகக் குழுவினருக்கு இடையிலான மோதல் காரணமாக குறித்த இந்த மரணம் சம்பவத்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

எவ்வித அடிப்படையும் இன்றி ஏன் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு பாதுகாப்பு அமைச்சு மேலும் அறிவித்துள்ளது.

Related posts

ஓடுபாதையிலிருந்து மீள அழைக்கப்பட்ட ஸ்ரீலங்கன் விமானம்

wpengine

இளம் பெண் துஷ்பிரயோகம் – சகோதரர்கள் மூவருக்கு மரண தண்டனை

wpengine

நள்ளிரவில் வெளியாகும் சிங்கம் – 3 படத்தின் தலைப்பு

wpengine