Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

தனது அதிகாரங்களை பிரதமர் ரணிலுக்கு வழங்கி வர்த்தமானி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

ஜனாதிபதியின் அதிகாரங்களை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு வழங்கும் வகையில் அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையொப்பத்துடன் குறித்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இன்று முதல் அமுலாகும் வகையில் குறித்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி ஜனாதிபதியின் கடமைகள் மற்றும் பொறுப்புக்கள் ரணில் விக்கிரமசிங்கவிற்கு உத்தியோகப்பூர்வமாக வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தான் இலங்கைக்கு வெளியே இருப்பதன் காரணமாக  பதவிக்குரிய தத்துவங்கள் பணிகளை கடமைகள் புரிவதற்கு இயலாதென கருதுவதனால் தான் இலங்கைக்கு வெளியே இருக்கும் காலப்பகுதியில் அவற்றை பிரயோகிப்பதற்கான புரிவதற்கான அதிகாரங்களை பிரதமருக்கு வழங்குவதாக ஜனாதிபதி விசேட வர்த்தமானியில் தெரிவித்துள்ளார்.

Related posts

வற் வரி குறிப்பிட்ட சில காலங்களுக்கே – லக்ஷ்மன் யாபா

wpengine

மியன்மார் : இலங்கைக்கு ஒரு சிவப்பு எச்சரிக்கை

wpengine

வெளிவிவகார அமைச்சர் ஐ.நாவில் இன்று உரை

wpengine