உள்நாட்டு செய்திகள்

தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 11,056 பேர் வெளியேற்றம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முப்படையினரால் நிர்வகிக்கப்பட்டுவரும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து கடந்த 29ஆம் திகதி வரை 11,056 பேர் தனிமைப்படுத்தப்பட்டு வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என கொவிட் 19 பரவல் தடுப்பு தேசிய பயன்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி, நாடு முழுவதும் முப்படையினரால் நிர்வகிக்கப்பட்டுவரும் 44 தனிமைபடுத்தும் நிலையங்களில் 5,154 பேர் தனிமைப்படுத்தலில் உள்ளனர்.

தனிமைப்படுத்தல் நிலையங்களான பனிச்சங்கேணியில் 7 பேர் மற்றும் ராஜகிரிய ஆயுர்வேத மருத்துவமனையிலுருந்து 8 பேர் என மொத்தம் 15 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனையின் பின்னர் தனிமைப்படுத்தல் சான்றிதழ்கள் வழங்கி கடந்த 29 ஆம் திகதி வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மஹகந்துரே மதுஷவுடன் தொடர்புடைய ஒருவர் உள்ளிட்ட 08 பேர் கைது..

wpengine

கண்டி அதிவேக வீதியின் இரண்டாம் கட்ட நிர்மாண உடன்படிக்கை கைச்சாத்து…

wpengine

நாடு முழுவதும் போலி வைத்தியர்கள் கண்டுபிடிப்பு

wpengine