உள்நாட்டு செய்திகள்

வீதி இலக்கம் – 430, தனியார் பேரூந்துகள் இன்று பணிப்புறக்கணிப்பில்…

மத்துகம – கொழும்பு, வீதி இலக்கம் – 430 இனைக் கொண்ட  தனியார் பேரூந்து மற்றும் சொகுவு பேரூந்து உரிமையாளர்களும் இன்று(18) காலை முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 17ம் திகதி பாடாசலை மாணவர் ஒருவர் பேரூந்தில் இருந்து இறங்க முற்பட்ட போது கீழே விழுந்து காயமடைந்த சம்பவத்தை முன்னிறுத்தி அந்த பேரூந்தின் சாரதி மற்றும் நடத்துனர் மீதும் பிரதேசவாசிகள் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த பேரூந்தின் சாரதியும், நடத்துனரும் தற்போது அகலவத்தை – பிம்புர மருத்துமனையில் சிகிச்சிப் பெற்று வருகின்ற நிலையில் தாக்குதலை மேற்கொண்ட தரப்பினரை கைது செய்யுமாறு கோரியே குறித்த இந்த பணிப்புறக்கணிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

-Rishma

Related posts

நாளை முதல் 4ம் திகதி வரையில் அதிபர்களுக்கான விடுமுறை ரத்து

wpengine

கோதுமை மாவுக்கான இறக்குமதி வரி அதிகரிப்பு..!

wpengine

ஞாயிறு தினங்களில் தனியார் வகுப்புகள் நடாத்துவதற்கு விரைவில் தடையுத்தரவு..

wpengine