உள்நாட்டு செய்திகள்

தபால் திணைக்கள ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து…

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு தபால் திணைக்கள ஊழியர்களின் விடுமுறைகள் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை(16) முதல் எதிர்வரும் பெப்ரவரி 10 ஆம் திகதி வரை இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தபால் மா அதிபதி டீ.எல்.பி.ஆர். அபயரத்ன அறிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக தபால் திணைக்களத்துக்கு பாரிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதுடன் இந்தத் தேர்தலை உரிய முறையில் சட்ட ரீதியாக நடத்துவதற்காக தபால் திணைக்களம் பாரிய கடமையை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி தேர்தல் நடத்துதல், வாக்குகளை எண்ணுதல் போன்ற நடவடிக்கைகளுக்காக சேவையாளர்களை நியமிக்கும் கடிதங்களை தாமதமின்றி ஒப்படைத்தல் மற்றும் வாக்காளர் அட்டைகளை வீடு வீடாகச் சென்று ஒப்படைத்தல் போன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தாக்கல் செய்த வேட்பு மனு நிராகரிப்பு..

wpengine

உயரதிகாரிகள் இருவரையும் பதவி நீக்க ஜனாதிபதி உத்தரவு…

wpengine

வழங்கிய வாக்குறுதிக்கு அமைய ஊழல் அரசியல் ஒழிக்கப்படும்

Azeem Kilabdeen