உள்நாட்டு செய்திகள்

தபால் தொழிற்சங்க ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்

(FASTNEWS|COLOMBO) – மத்திய தபால் பரிமாற்றகத்தின் ஊழியர்கள் இன்று(16) மாலை 4 மணி முதல் சேவையிலிருந்து விலகியிருக்கும் அடையாளப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக, ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாளை மறுதினம் மாலை 4 மணிவரை இந்தப் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்கவுள்ளதாக, ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.

ஆட்சேர்ப்பு, பதவி உயர்வு மற்றும் வேதன பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விடயங்களை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

அரசாங்கம் தமது அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பு தொடர்பில் செவிசாய்க்காவிடின், பிறிதொரு நாளில் அனைத்து ஊழியர்களையும் ஒன்றிணைத்து நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கும் தயாராகவுள்ளதாக
ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts

பட்டாணி ராசிக் கொலைக்கு றிசாத் பதியுதீனுக்கும் ஓர் அணுவளவேனும் சம்பந்தம் இல்லை

wpengine

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – 80 சதவீத விசாரணைகள் நிறைவு

wpengine

அத்துரலிய ரத்ன தேரரின் நிலைப்பாடுகள் குறித்தே சுயாதீனம் தொடர்பில் தீர்மானிக்க முடியும் – ஜேவிபி…

wpengine