Top Story 2உள்நாட்டு செய்திகள்

தபால் மூல வாக்களிப்புக்காக மேலும் இரு தினங்கள்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புக்காக மேலும் இரு தினங்கள் வழங்கப்பட்டுள்ளன.

பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பு நேற்றுடன் நிறைவு பெற்ற நிலையில் இதன்போது வாக்களிக்கத் தவறியவர்களுக்கு மேலும் இரண்டு நாட்கள் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, எதிர்வரும் 24 ஆம் மற்றும் 25 ஆம் திகதிகளில் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

24 ஆம் திகதி காலை 8.30 மணி முதல் பிற்பகல் 4 மணி வரையும் 25 ஆம் திகதி காலை 8.30 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரையும் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்துடன், தமது அலுவலகம் அமைந்துள்ள மாவட்டத்துக்கான மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் தபால் மூல வாக்களிப்பை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ராஜகிரிய – நாவல பகுதிகளில் வாகன நெரிசல் – மாற்று வழிகளை பயன்படுத்துமாறு கோரிக்கை.

wpengine

தனியார் பெற்றோல் தாங்கி உரிமையாளர்கள் சங்கம் பொலிஸ் மா அதிபருக்கு கடிதம்

wpengine

கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் நிஷங்க சேனாதிபதி உட்பட 5 பேரை கைது செய்ய முடியும்

wpengine