Top Story 3உள்நாட்டு செய்திகள்

தப்பியோடிய கொரோனா நோயாளி கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சப்புகஸ்கந்த- மாகொல வடக்கு, தேவாலய வீதியில், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் கொவிட் தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட நபரொருவர் வீட்டிலிருந்து தப்பிச் சென்ற நிலையில் மாகோல தெற்கில் வைத்து வீடொன்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் அறிக்கை கிடைக்கும் வரை வீட்டில் தனிமைப்படுத்தலில் இருந்த மேற்படி நபர், அறிக்கையின் பிரகாரம் தொற்று உறுதியாகியுள்ளதை அறிந்தவுடன் இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார்.

22 வயதுடைய நிமேஸ் மதுசங்க என்ற இளைஞனே இவ்வாறு தப்பியோடியுள்ளார் என பொலிஸார்  மேலும் தெரிவிக்கின்றன.

Related posts

பண்டிகை கால பேரூந்து சேவைகள் 24 ஆம் திகதி வரை நீடிப்பு…

wpengine

ரயில்வே பணிப்புறக்கணிப்பு – போக்குவரத்து பிரச்சினை குறித்து தொடர்பு கொள்ள விஷேட தொலைபேசி இலக்கம்….

wpengine

கோட்டாபயவுக்கு சில வைத்தியர்கள் தவறான ஆலோசனை வழங்கினர் – முன்னாள் அமைச்சர் சந்திர சேன

News Editor