உள்நாட்டு செய்திகள்

தமது அரசாங்கத்தில் உயிரச்சுறுத்தல் இருக்கவில்லை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடத்தலுக்கு உள்ளான இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதரக பெண் அதிகாரி தற்போது பேசுவதற்குகூட முடியாத வகையில் அச்சமடைந்த நிலையில் காணப்படுவதாக முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

சிறிகொத்தவில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இன்று(02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

அவரால் தனது குடும்பத்தினருடன் கூட சரியாக பேசமுடியாத நிலையில் உள்ள போது, அவரிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறுவதில் நியாயம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடத்தலுக்கு உள்ளான குறித்த பெண் அதிகாரி உள்ளிட்ட அவரது குடும்பத்தின் உறுப்பினர்கள் அனைவரும் நாட்டை விட்டு வெளியேறி சுவிட்சர்லாந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாவும் அவர் கூறியுள்ளார்.

தமது அரசாங்கத்தின் 5 வருட காலத்தில் எந்தவொரு நபரும் உயிரச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு சென்றதில்லை என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

சர்வதேச றோட்டறி கழக மாநாட்டிற்காக பிரதமர் தென்கொரியா பயணம்

wpengine

அரச நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களுக்கு மகப்பேற்று விடுமுறை…

wpengine

பிரதமர் மஹிந்தவை ஆர்.சம்பந்தன் சந்தித்தமை தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிக்கை..

wpengine