உள்நாட்டு செய்திகள்

தமிழர்களின் பிரச்சினையை தீர்க்க புதிய அமைப்பு

வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தலைமையில் புதிய அமைப்பு ஒன்றை உருவாக்க உள்ளதாக தமிழர் விடுதலைக் கூட்டணி தெரிவித்துள்ளது.

ஜனநாயக தமிழ் தேசிய முன்னணி என்ற பெயரில் அந்த அமைப்பு தொடங்கப்படும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான பேச்சுவார்த்தை ஒன்று இன்று கொழும்பில் நடைபெற்றுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடாக தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காது என்பதால், இந்த புதிய அமைப்பை ஆரம்பிக்க தீர்மானித்ததாகவும் சங்கரி மேலும் கூறியுள்ளார்.

Related posts

கொழும்பு- கண்டி ரயில் பயண நேர அட்டவணையில்   மாற்றம்

wpengine

இலங்கை கிரிக்கெட்டின் புதிய தேர்வுக்குழு நியமனம்…

wpengine

முதலாம் தரத்திற்கு லஞ்சம் கோரப்படின் இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றத்தடுப்பு பிரிவிற்கு அறிவிக்கவும்

wpengine