Top Story 1உள்நாட்டு செய்திகள்

தரகுப் பணத்திற்கான சிக்கல் நிறைவு – எரிபொருள் விநியோகம் வழமைக்கு..!

இன்று(05) முதல் வழமையான செயற்பாட்டிற்கு அமைய எரிபொருள் முற்பதிவு செய்யப்படும் என பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தரகுப் பணம் தொடர்பான சிக்கலுக்கு துறைசார் அமைச்சரினால் நேற்று(04) தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட்டதாக பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் செயலாளர் கபில நாஒட்டுன்ன குறிப்பிட்டார்.

அதற்கமைய, அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் இன்று(05) முதல் உரியவாறு எரிபொருள் விநியோகிக்கப்படும் என அவர் கூறினார்.

இதனிடையே, கொழும்பு உள்ளிட்ட சன நெரிசல் மிக்க பல பகுதிகளிலுள்ள சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொரிள் இல்லை என நேற்று(04) அறிவிக்கப்பட்டிருந்தது.

Related posts

2017ம் ஆண்டு முதல் ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகைத் இலங்கைக்கு..

wpengine

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்று 2/3 பெரும்பான்மையோடு, சர்வஜன வாக்கெடுப்பும் அவசியம் – உயர் நீதிமன்றத்தில் ஹக்கீம் தெரிவிப்பு..!

wpengine

மேலும் 06 பேர் குணம்

wpengine