உள்நாட்டு செய்திகள்

தலவாக்கலை – லிந்துலை நகர சபையின் உப தலைவர் கைது…

தலவாக்கலை – லிந்துலை நகரசபையின் உப தலைவரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபத்தலைவர்களுள் ஒருவருமான லெட்சுமன் பாரதிதாசன் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

ஹட்டனிலுள்ள தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தின் பெயரை மாற்றியமை தொடர்பில் சந்தேகநபருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த பிடியாணை தொடர்பில் ஹட்டன் பொலிஸாரால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய, தலவாக்கலை பொலிஸாரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் இன்று(09) ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

ரயன் உள்ளிட்ட ஐவர் நாடு கடத்தப்பட்டனர்…

wpengine

பிரதமர் ரணில் பதவியேற்றபோது உலகம் உதவும் என்ற எதிர்பார்ப்பு வீண் போய்விட்டது- மரிக்கார்.

News Editor

மழையுடன் கூடிய காலநிலையினால் நீர் மின் உற்பத்தி அதிகரிப்பு…

wpengine