உள்நாட்டு செய்திகள்

தலவில தேவாலய திருவிழாவை முன்னிட்டு விசேட புகையிரத சேவை…

தலவில புனித அன்னம்மாள் தேவாலயத்தின் வருடாந்த திருவிழாவை முன்னிட்டு இன்று(04) முதல் விசேட புகையிரத சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.

இன்று(04) முதல் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விசேட புகையிரத சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், கொழும்பு முதல் பாலாவி வரையும் மொறட்டுவ முதல் பாலாவி வரையிலும் விசேட புகையிரத சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், இன்று(04) காலை 9.35 க்கு சிலாபம் வரையில் பயணிக்கும் புகையிரத பாலாவி வரை சேவையில் ஈடுபடவுள்ளதுடன், பிற்பகல் 1.10 க்கு கொழும்பிலிருந்து மாதம்பே வரை செல்லும் புகையிரதம் பாலாவி மற்றும் புத்தளம் வரை பயணிக்கவுள்ளது.

மொறட்டுவயிலிருந்து மேலதிக புகையிரதமொன்றும் சேவையில் ஈடுபடவுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

கஞ்சா பயிரிட முதலீட்டாளர்களை தேடும் அரசாங்கம்..!

wpengine

மதுபானசாலைகளுக்கான அறிவித்தல்

wpengine

கடலில் ஏற்பட்ட மாற்றத்தால் அச்சத்தில் மன்னார் மக்கள்!

wpengine