உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

தலைப்பிறை தென்படவில்லை; நோன்பு நாளை மறுதினம் ஆரம்பம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –புனித ரமழான் முதல் நோன்பை நாளை மறுதினம் 25 ஆம் திகதி ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஹிஜ்ரி 1441 புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை நாட்டின் எந்தப்பாகத்திலும் தென்படாததால் ஷஃபான் மாதத்தை முப்பதாக பூர்த்தி செய்து புனித ரமழான் முதல் நோன்பை நாளை மறுதினம் 25 ஆம் திகதி ஆரம்பிப்பதென கொழும்பு பெரிய பள்ளிவாசல், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மற்றும் முஸ்லிம் சமய கலாச்சார திணைக்களம் ஆகியன உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளன.

புனித ரமழான் தலைப் பிறையைத் தீர்மானிக்கும் மாநாடு கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இன்று (23) மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து நடைபெற்றது.இதன் போதே மேற்படி தீர்மானம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

Related posts

இன்றுடன் பொலிஸ் சேவைக்கு அகவை 150..

wpengine

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பிரதி தலைவராக சல்மான் நியமிப்பு…

wpengine

இலவச கல்வியின் நோக்கத்தை அரசு சரிவர நிறைவேற்ற பாடுபடுகின்றது எருக்கலம்பிட்டி மத்தியகல்லூரி விழாவில் பிரதமர்

wpengine