உள்நாட்டு செய்திகள்

தலைமன்னாரில் கைப்பற்றப்பட்ட நான்கு கோடி ரூபா மதிப்பிலான தங்கம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

தலைமன்னாரில் நான்கு கோடி ரூபா பெறுமதியான தங்கம் சுங்கத்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு கிலோ எடை கொண்ட இந்த தங்கத்துடன் மூன்று சந்தேக நபர்களையும் இலங்கை சுங்கத்திணைக்களத்தின் காங்கேசன்துறை உப செயற்பாட்டு நிலைய அதிகாரிகள் கைது செய்துள்ளதாக சுங்கத்திணைக்கள ஊடகப் பேச்சாளர் சுதத்த சில்வா தெரிவித்துள்ளார்.

பொலிஸார் மேற்கொண்ட விசாரணை 

இலங்கைக் கடற்படையின் தலைமன்னார் முகாம் புலனாய்வுப் பிரிவினருக்குக்கிடைத்த தகவல் ஒன்றினை அடுத்து இந்தியாவுக்கு கடத்தப்படவிருந்த நிலையில் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 1.912 கிலோ கிராம் எடைகொண்ட இதன் பெறுமதி 43,208,000 ரூபாவாகும்.

நடுக்கடலில் வைத்து தங்கத்தைப் பறிமுதல் செய்து, சந்தேக நபர்களையும் கைது செய்த கடற்படையினர் அவர்களை சுங்கத் திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளனர்.

இதனையடுத்து கைப்பற்றப்பட்ட தங்கம் அரசுடைமையாக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்களுக்கு ஏழரை இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு எதிரான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது

கைது செய்யப்பட்டவர்கள் பேசாலை மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

 

Related posts

ஒரு தொகை சிகரட்டுக்களுடன் இரண்டு பேர் கைது…

wpengine

இராஜகிரிய- ஒபேசேகரபுர பகுதிக்கு தற்காலிகமாக பூட்டு

wpengine

சஜித் ஜனாதிபதி வேட்பாளர்?; ரணில் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை

wpengine