உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

தாஜுதீன் கொலை – ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவிடம் விசாரணை

பிரபல றக்பி வீரரான வஸீம் தாஜுதீன் கொலை தொடர்பில், ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் உறுப்பினர்களின் தொடர்புகள் குறித்தும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள என்று, இரகசியப் பொலிஸார், நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு வந்தனர்.

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு, புதன்கிழமை நேற்றையதினம் (20) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே, மேற்கண்டவாறு கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டது.

ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் பணியாட்தொகுதி அதிகாரியான உதய நாகஹவத்த என்பவரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும் மேலும் நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது.

அதற்கு மேலதிகமாக, அப்பிரிவின் உறுப்பினர்கள் நால்வரிடமும் இது தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன என்றும் இரகசியப் பொலிஸார், நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தனர்.

Related posts

கலா ஓயா பெருக்கெடுப்பினால் வெள்ள நிலை

wpengine

A/L மாணவர்களுக்கு பைஸர் தடுப்பூசி

wpengine

வெளிநாடு செல்லவுள்ள பயணிகள் 04 மணி நேரத்திற்கு முன்னரே வருகை தரவும்..

wpengine