உள்நாட்டு செய்திகள்

தாஜுதீன் கொலை வழக்கு – அனுர’வின் விளக்கமறியல் நீடிப்பு..

சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க மற்றும் நாரஹன்பிட்டிய பொலிஸ் குற்ற தடுப்ப பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி சுமித் பெரேரா ஆகியோரை இந்த மாதம் 26 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதவான் உத்தரவை பிறப்பித்துள்ளார்.

பிரபல ரகர் வீரர் வசிம் தாஜூடினின் கொலை வழக்கு தொடர்பில் சாட்சியங்களை மறைத்த குற்றத்திற்காகவே இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

பிரபல ரகர் வீரர் வசிம் தாஜூடின் 2012 ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் திகதி மர்ம முறையில் கொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஐ.தே.க. – கூட்டமைப்பு அரசு என்றே கூற வேண்டும் – தயாசிறி

wpengine

திருகோணமலையில் தமிழ் மொழிக்கு உரிய அந்தஸ்து கிடைக்காமை குறித்து மிகவும் கவலையடைகின்றேன். – இம்ரான் எம்.பி..!

wpengine

ஞானசார தேரருக்கு எதிரான வழக்கை இணக்க சபைக்கு மாற்றுமாறு உத்தரவு..

wpengine