உள்நாட்டு செய்திகள்

தாஜுதீன் படுகொலை குறித்து அசமந்தப்போக்கு – குடும்பத்தினர் எச்சரிக்கை

படுகொலை செய்யப்பட்ட பிரபல ரக்பி வீரர் வஸீம் தாஜூதீனின் கொலை தொடர்பான விசாரணைகள் உரிய முறையில் மேற்கொள்ளப்படாவிடின் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவுள்ளதாக தாஜூதீன் உறவினர்கள்  எச்சரித்துள்ளனர்.
தாம் நீதி கேட்டு வீதியில் இறங்கி போராடப்போவதாக அவர்கள் தெரிவித்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த விசாரணைகள் தற்போது இடம் பெறுகின்றபோதும், ஏனைய விசாரணைகளை போன்று தேக்கப்பட்டுவிடுமோ என்ற அச்சம் தமக்கு ஏற்பட்டுள்ளதாக தாஜூதீனின் உறவினர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
இது தவிர, அரசியல் அழுத்தங்கள் காரணமாக இந்த விசாரணைகள் பின் தள்ளப்படக்கூடும் என்ற அச்சமும் தமக்கு ஏற்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Related posts

இலங்கைக்கான அவசர உதவியாக 200 மில்லியன் டொலர்!

wpengine

தரம் ஐந்து புலமைப்பரிசில் பெறுபேறுகள் வாரயிறுதியில் வெளியிடப்படும் – பரீட்சை திணைக்களம்

wpengine

எதிர்வரும் 23ஆம் திகதி தொடக்கம் வாக்காளர் பட்டியல் காட்சிக்கு

wpengine