உள்நாட்டு செய்திகள்

தான் அரசியல் வாழ்வுக்கு ஓய்வழிக்கப் போகின்றேன் – சமல்

தாம் விரைவில் அரசியலில் இருந்து ஓய்வுபெறவிருப்பதாக ஸ்ரீலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷவின்  மூத்த சகோதரரும், நாடாளுமன்ற சபாநாயகருமான சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதம வேட்பாளராக சமல் ராஜபக்ஷ நிறுத்தப்படவுள்ளதாக வெளியான தகவல்கள் குறித்து கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“விரைவில் அரசியலில் இருந்து ஓய்வுபெறுவதற்கு பெரும்பாலும் வாய்ப்புகள் உள்ளன.

பிரதமரான நான் நியமிக்கப்படவுள்ளதாகவோ, பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்படவுள்ளதாகவோ வெளியாகும் செய்திகளில் அடிப்படை உண்மைகள் எதுவும் இல்லை.

எனக்கு அத்தகைய அபிலாசைகளும் இல்லை” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

1989ம் ஆண்டு முதல் முறையாக அம்பாந்தோட்டை மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்ட சமல் ராஜபக்ஷ கடந்த 26 ஆண்டுகளாக  தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Related posts

அமைச்சுப் பதவிக்காக கட்சி மாறுபவர்களுக்கு இதுவொரு எச்சரிக்கை

wpengine

இலங்கையில் ஜப்பான் தொழிற்சாலை ஒன்றை அமைக்கும் நடவடிக்கையில் அர்ஜுன் அலோசியஸ்…

wpengine

டொக்டர் ஷாபி விடயத்தை கையில் எடுத்து சீரழித்த சன்ன ஜயசுமன SJB இல் இணைவதற்கு, கூட்டணி கட்சி தலைவர்களான மனோ,ரிஷாட் கடும் எதிர்ப்பு..!

wpengine