உலக செய்திகள்

தாய்லாந்திலும் தலை தூக்கும் கொவிட் – 19

(ஃபாஸ்ட் நியூஸ் | தாய்லாந்து ) – தாய்லாந்தில் கொவிட் -19 என அறியப்படும் கொரோனா தொற்றுக்கு உள்ளான 120 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா தொற்று குறித்த தாய்லாந்து அரசாங்க செயற்பாட்டுக்குழுவின் ஊடகப்பேச்சாளரை மேற்கோள்காட்டி இந்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதன்படி, புதிதாக அடையாளம் காணப்பட்டவர்கள் உள்ளடங்களாக, தாய்லாந்தில் கொவிட் – 19 தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 1,771 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், தாய்லாந்தில் கடந்த மணித்தியாளங்களில், இரண்டு உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதோடு, அவை உள்ளடங்களாக 12 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஐ. நா. மனித உரிமைகள் பேரவையிலிருந்து அமெரிக்கா விலகல்..?

wpengine

ஜப்பானில் இன்று முக்கிய திட்டங்களுடன் G7 மாநாடு தொடங்குகிறது

wpengine

இலவசத்தை நம்பியதால் வீங்கிய உதடு- அமெரிக்க மொடல் அழகியின் கதை

News Editor