உள்நாட்டு செய்திகள்

திடீரென அமெரிக்காவுக்கு பறந்த கோத்தபாய! அதற்கான பின்னணி என்ன?

பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு முகங்கொடுத்துள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அமெரிக்காவுக்கு சென்றுள்ளார்.

எதிர்வரும் 18ஆம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், கோத்தபாய அவசரமாக அமெரிக்க நோக்கி சென்றுள்ளமை சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

முப்படையினர் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளடங்களாக 179 பேர் பசிலின் பாதுகாப்பிற்காக ஈடுபடுத்தப்பட்டிருந்தமை தொடர்பில், மேற்கொள்ளப்படுகின்ற விசாரணைகளுக்காக வாக்குமூலம் ஒன்றினை பெற்றுகொள்வதற்காக அவர் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

அமைச்சர் ஒருவரின் பாதுகாப்புக்கு இராணுவத்தினரை ஈடுபடுத்துவது கடுமையான குற்றம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேனை புஷ்பா ராஜபக்சவுக்கும் பெண் கடற்படை உத்தியோகத்தர்கள் மூன்று பேர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

இதற்கு மேலதிகமாக பசில் ராஜபக்சவின் உடல் சுகாதாரம் மற்றும் வீட்டினை சுத்தம் செய்வதற்காகவும், அரசாங்க பாதுகாப்பு பிரிவு படையினர் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர் என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

அமைச்சரின் அதிகாரத்தை மீறி அடிப்படையின்றி இவ்வாறு இராணுவத்தினர் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தற்போதைய அரசியல் மோதல்களில் தலையிடாமல் அமைதியாகுமாறு கோத்தபாய ராஜபக்சவின் ஆசோகர்கள் அவருக்கு ஆலோசனை வழங்கியதாக கொழும்பு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

அதற்கமைய சிறிது காலம் நாட்டை விட்டு செல்லுமாறும் கோத்தபாயவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எப்படியிருப்பினும், கோத்தபாயவின் மனைவியின் தாயாரின் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளமையினால் அவர் அமெரிக்காவுக்கு சென்றுள்ளதாக ராஜபக்ச குடும்ப தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

எனினும் கோத்தபாய ராஜபக்ச மீண்டும் மே மாதம் முதல் வாரத்திலே இலங்கை வரவுள்ளார் என குறிப்பிடப்படுகின்றது.

Related posts

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் வேட்பு மனுவுக்கு எதிராக நீதிமன்றில் மனு…

wpengine

பங்காளிக் கட்சிகள் – பிரதமர் : சந்தித்தனர்

wpengine

மக்கள் குரல்களுக்கு செவிசாய்க்காத நல்லாட்சி அரசாங்கம் – பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

wpengine